சிவா: நம்பிக்கை வென்றது

இனி அதிக படங்களில் நடிக்கப்போவதா கவும் நல்ல கதைகளில் கவனம் செலுத்தப்போவதாகவும் கூறுகிறார் சிவ­கார்த்திகேயன். குறிப்பாக நடப்பாண்டில் நிச்சயம் தனது படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என உறுதிபடச் சொல்லி இருக்கிறார். சிவாவைப் பொறுத்தவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு ரசிகர்களும் விரும்பும் நாயகனாக உருவெடுத்து வருகிறார். ரஜினிக்கு அடுத்து, குழந்தைகளின் மனம் கவர்ந்த நாயகர்களின் பட்டியலில், இன்றைய தேதியில் விஜய்க்கு அடுத்து சிவாவுக்குதான் இடம் கிடைத்துள்ளது. எனவே, இவரது படங்க ளுக்கு குடும்பத்துடன் திரைய ரங்குகளுக்கு வரும் ரசிகர்­களின் எண்ணிக்கை அதி­ க­ரித்து வருகிறது. இதன் காரணமாக விநியோகிப்பாளர்­கள் மத்தியில் சிவ கார்த்­திகேயனின் படங்க­ ளுக்கு மவுசு அதிகரித்துள்­ ளது.

இந்நிலையில், தமது டுவிட்டர் பக்கத்தில் காணொளிப் பதிவு ஒன்றை இடம்பெறச் செய்துள்ளார் சிவா. அதில் சென்ற 2018ஆம் ஆண்டில் ஒரு நடிகராக, பாடலாசிரி யராக, தயாரிப்பாளராக என்று பல முயற்சிகளை மேற்கொண்­டது தமக்குத் திருப்தி அளித்திருப்பதாகக் குறிப்­ பிட்டுள்ளார். "எனது முயற்சிகள் அனைத்திற்கும் உங்க ளின் வரவேற்பு நன்றா கவே இருந்தது. இந்த வரவேற்புதான் எனக்கு நம் பிக்கையைக் கொடுக்கிறது.

"இந்த நம்பிக்கைதான், நல்ல நல்ல முயற்சிகளைச் செய்யத் தூண்டுகிறது. 'கனா' படத்தின் 'வாயாடி பெத்த புள்ள' பாடலுக்கு நீங்கள் எல்லோரும் கொடுத்த வர வேற்பும் பாராட்டும் ஆசீர்வாதமும் மறக்கவே முடியாதது. மகள் ஆராதனா பாடிய முதல் பாடல் அது," என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 'கனா' படத்தைப் பொறுத்தவரையில் நம்பிக் கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அதை தயாரித்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய அப்படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்ததாகக் கூறி உள்ளார்.

"ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த உற்சாகத்துடன் இன்னும் பல நல்ல வி‌ஷயங்களைச் செய்ய வேண்டும் என்கிற முனைப்பு ஏற்பட்டி ருக்கிறது. இந்த ஆண்டும் நிறைய படங்களில் நடிக்கிறேன். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். "ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் 'முதல் தோற்றம்' இந்த மாதத்தில் வர இருக்கிறது. தொடர்ந்து உங்கள் ஆதரவு வேண்டும். மீண்டும் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்," என தமது காணொளிப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த ஆண்டு தமது நிறுவனம் சார்பில் இரண்டு படங்களை மட்டுமே தயாரிப்பது என முடிவு செய்துள்ள அவர், புதுமுகங்களுக்கு வாய்ப்பு தரவும் விரும்புகிறாராம். தவிர, நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது, வெற்றிப் படங்களை அளித்து சம்பளத்தை நியாயமான அளவில் உயர்த்துவது ஆகிய திட்டங்களும் உள்ளதாகத் தகவல்.

இதற்கிடையே நடிகர் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தொடர்பான சில விவகாரங்களில் சிவாவின் ஆதரவைக் கேட்டு சிலர் அணுகினராம். ஆனால், வளர்ந்து வரும் வேளையில் இத்தகைய விவகாரங்களில் தலையிட வேண்டாம் என முடிவெடுத்திருப்பதாகக் கூறி சிவா ஒதுங்கிக் கொண்டதாகச் சொல்லப் படுகிறது. இந்நிலையில், சிவா தயாரிக்கும் அடுத்த படத்தையும் அவரது நண்பரான அருண்ராஜா காமராஜ்தான் இயக்குவார் என வெளியான தகவல் உண்மையல்லவாம். மாறாக தன் நண்பருக்காக மற்றொரு முன்னணி நடிகரிடம் பேசி கால்‌ஷீட் பெற்றுத் தந்துள்ளதாக சிவாவுக்கு நெருக்கமானோர் அவரை மெச்சுகிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!