ரவி: கதை சொல்லும் விதம் முக்கியம்

ரவி: கதை சொல்லும் விதம் முக்கியம்

1 mins read
41886d60-4d39-4018-956f-feda3a02f419
-

எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் அதை ரசிகர்களுக்கு அளிக்கும் விதம்தான் என்கிறார் ஜெயம் ரவி. 'அடங்க மறு' படத்தின் வெற்றி இவரை ரொம்பவே உற்சாகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இப்படத்தின் விமர்சனங்களைப் படித்துப் பார்த்த பிறகு ஊடகவியலாளர்கள் மீதான மரியாதை பன்மடங்கு அதிகமாகியுள்ளது எனக் குறிப்பிட்டார். "இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கான அனைத்து பாராட்டுகளும் இயக்குநர் கார்த்திக்கைத்தான் சாரும். இந்த வெற்றி மூலம் கார்த்திக் மற்றும் ஹோம் மூவி மேக்கர் நிறுவனத்தை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழ்த் திரையுலகில் வரவேற்கிறோம். "நான் கதையை நம்பியதைவிட கார்த்திக்கை நம்பினேன். அவர் எல்லோரிடமும் பேசி மயக்கி வேலை வாங்கிவிடுவார். இந்த மொத்தக் குழுவுடன் மீண்டும் இன்னொரு படத்தில் இணைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்," என்றார் ஜெயம் ரவி. கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியான 'அடங்க மறு' படத்துக்கு வசூல், விமர்சன ரீதியில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.