மும்பை விமான நிலைய ஊழியர்களைக் குறை கூறிய காஜல்

மும்பை விமான நிலைய ஊழியர்களைக் குறை கூறிய காஜல்

1 mins read
3e1e0cee-8621-4613-a0f4-51e4c45fc2f8
-

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்­பவர் காஜல் அகர்வால். இவர் தனக்கு மும்பை விமான நிலையத்தில் நடந்த கொடுமை­களைப் பற்றி தற்போது கோபமாக வெளியிட்டி­ருக்கிறார். அதில், "ஒருநாள் காலையில் மும்பை விமான நிலையத்திற்குச் சென்றேன். அங்கே சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்­பட்டிருக்கும் வரிசைக்­குச் சென்றதும் அங்கிருக்கும் பெண் என்னை தேவையில்லாமல் அலைக்­கழித்தார். 75 நிமிடங்களுக்கு முன்ன­தாகவே விமான நிலையத்துக்குச் சென்றிருந்த­போதும் எனக்குத் தேவையில்லாமல் சங்கடங்­களைக் கொடுத்தனர். அதைக் கடந்து விமானத்­துக்குச் செல்லலாம் என்றால் ஒரு மணி நேரத்துக்கு முன்ன­தாகவே விமானத்­துக்குச் செல்ல­வேண்டிய நுழைவு வாயிலை மூடி இருந்தனர். டிக்கெட் வாங்கிய இடத்தி­லிருந்து விமானம் இருக்கும் இடத்திற்கு கிட்டத்தட்ட அரை மணி நேரம் நடந்து செல்ல­வேண்டிய தூரத்தில் இருந்தது. இப்படி ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவித்த நான், அதை விமான நிறுவன நிர்வாகத்­துக்குத் தகவலாக கொண்டு சென்றேன்.

உடனே என்னைத் தொடர்பு­கொண்டு, என்னிடம் தனியாகப் பேச அழைத்தனர். அவர்­களோடு எனக்குச் சமாதானம் பேச விருப்பம் இல்லை. அதனால் நான் நேரம் ஒதுக்கவில்லை. நான் நிறைய விமான நிலை­யங்­களுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இதுபோல் நான் கஷ்டப்பட்டது இல்லை," என்று வருத் தத்­துடன் கூறினார் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் அடுத்து தமிழில் 'பாரீஸ் பாரீஸ்' படம் வெளியாக இருக்கிறது.