நயன்தாராவின் அழகைப் புகழ்ந்த குஷ்பு

நயன்தாராவின் அழகைப் புகழ்ந்த குஷ்பு

1 mins read
b6e1df7b-d1b6-4040-9d19-91c84ae0933b
-

'தல' அஜித்தும் நயன்தாராவும் நடித்திருக்கும் படம் 'விஸ்வாசம்'. இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சியைச் சில தினங்களுக்கு முன்பு படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் அஜித் பேசிய வசனங்களும் அதிரடிச் சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை மிகவும் கவர்ந்து உற்சாகப்படுத்தி வருகின்றன. "வாழ்க்கையில் ஒரு தடவை அழாத பணக்காரனும் இல்லை. ஒரு தடவை சிரிக்காத ஏழையும் இல்லை. என் கதையில் நான் வில்லன்டா. ஏறி மிதிச்சேன்னு வை, ஏரியா வாங்குறது இல்ல, மூச்ச கூட வாங்க முடியாது. பேரு தூக்குத் துரை, தேனி மாவட்டம், ஊர் கொடுவிழாபட்டி, மனைவி நிரஞ்சனா, பெண் பெயர் சுவேதா. ஒத்தைக்கு ஒத்தை வாடா," என்று அஜித் பேசும் வசனங்கள் முன்னோட்டக் காட்சியில் இடம்­ பெற்றிருந்தன. முன்னோட்டக் காட்சியில் நயன்­தாராவைப் பார்த்து நீங்க பேரழகு என்று அஜித் வர்ணிக்கும் வசனமும் இடம்பெற்றுள்ளது. நடிகை குஷ்பு, முன்னோட்டக் காட்சியைப் பாராட்டி உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறும்போது, "விஸ்வாசம் முன்னோட்டக் காட்சியைப் பார்த்து எனக்கு வார்த்தையே வரவில்லை. எனது 'தல' படத்துக்கு விஸ்வாசமாக போகலாம். நயன்தாரா படத்தில் மிகவும் அழகாக இருக்கிறார்," என்று கூறியுள்ளார். 'விஸ்வாசம்' படத்தையும் நயன்­தாராவையும் குஷ்பு பாராட்டியதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவருக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.