நடிகர் ஆர்யாவுக்கும் நடிகை சாயிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக கோலிவுட்டில் பரவலாகப் பேசப்படுகிறது. தமிழ்த் திரையின் விளையாட்டுப் பிள்ளையாக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவர் திருமணம் செய்து கொள்வதற்காக 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் சில பெண்களைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் இறுதி நிகழ்ச்சியில் 'யாரையும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமில்லை', எனக் கூறி தப்பித்துக்கொண்டார். இந்நிலையில், நடிகை சாயிஷாவுடன் அவருக்குக் காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வெளி வருகின்றன. 'கஜினிகாந்த்' படத்தில் முதன் முதலாக இருவரும் இணைந்து நடித்தனர். தற்பொழுது கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'காப்பான்' படத்தில் சாயிஷா நாயகியாகவும் ஆர்யா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள். 'கஜினிகாந்'தில் தொடங்கிய நட்பு 'காப்பான்' படப்பிடிப்பில் காதலாக மாறியிருப்பதாகக் கூறப்படுகிறது. இருவரும் ஒரே மதம் என்பதால் திருமணத்திற்கு எந்தவிதப் பிரச்சினையும் இருக்காது. விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
ஆர்யாவின் காதல் வலையில் விழுந்த சாயிஷா
1 mins read
-

