பொங்கலைக் கொண்டாட வரும் திரைப்படங்கள்

பொங்கலைக் கொண்டாட வரும் திரைப்படங்கள்

1 mins read
381bec97-7075-4dc5-b529-3bcf8f89f08e
-

தமிழ்த் திரையின் முன்னணி நடிகர்களான அஜித், ரஜினி இருவரின் படங்கள் பொங்கலை முன்னிட்டு வெளிவருவதாக முன்பே அறிவித்திருந்தன. இருந்தாலும் பொங்கல் போட்டியில் தாங்களும் ஏதோ ஒரு விதத்தில் கலந்து­கொள்ளவேண்டும் என்று முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகின்றனர். அதனால் விக்ரம் நடிக்கும் 'கடாரம் கொண்டான்' படத்தின் முன்னோட்டக் காட்சியும் நடிகர் ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 3' படத்தின் முதல் சுவரொட்டிப் படமும் அதே நாளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே கதிர் நடித்துள்ள 'சிகை' படமும் பொங்கலன்று வெளியாகிறது. ஆனால் இத்திரைப்­படம் திரையரங்கு கிடைக்காத காரணத்தால் திரையரங்கில் வெளி­வராமல் நேரடியாக 'டிஜிட்டலில்' வெளியா­கிறது. தமிழ்த் திரையில் இது ஒரு புது முயற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.