ஷாருக்கானின் சொத்து மதிப்பைக் கேட்டு அதிர்ச்சியில் இருக்கும் திரை பிரபலங்கள்

ஷாருக்கானின் சொத்து மதிப்பைக் கேட்டு அதிர்ச்சியில் இருக்கும் திரை பிரபலங்கள்

2 mins read
34d83de3-d902-4ddc-8f6c-5070e3194584
-

இந்திய திரையுலகின் 'சூப்பர் ஸ்டார்' என்றும் 'பாலிவுட் பாட்ஷா' என்றும் அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். இவர் இந்திய சினிமா உலகிற்கு ஒரு வரம் என்று சொல்லும் அளவிற்குத் தன் அற்புதமான நடிப்பால் உலகப் புகழ் பெற்றவர். 'தீவானா' என்ற திரைப்படம் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமான ஷாருக் கான் இதுவரை 80 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். அதில் பெரும்பாலானவை மிகப் பெரிய அளவில் வெற்றிப்படங்களாக அமைந்து அவரை உலகமறியச் செய்தது. இதன்மூலம் உலகெங்கிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் சேர்ந்தனர். 'பாலிவுட்' பிரபலங்கள் பலர் பல கோடிகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கின்றனர். அதில் முக்கியமாக ஷாருக்கானை கூறலாம். ஏனென்றால் சினிமாவைப் போன்றே தொழிலிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார் நடிகர் ஷாருக் கான்.

சினிமா, விளம்பர படங்கள், தொழில் என அனைத்திலும் நாள் ஒன்றுக்குப் பல ஆயிரம் கோடி வருமானத்தைப் பெறுகிறார் ஷாருக்கான். ஷாருக்கான் மும்பையில் மன்னாட் என்ற பகுதியில் கட்டியிருக்கும் மாளிகை வீட்டின் மேல் பலருக்கும் ஆசை இருக்கிறது. அந்த வீடு பற்றி அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய ஷாருக்கான், "நான் திருமணமாகி மும்பை வந்தபோது சின்ன வீட்டில்தான் குடி இருந்தேன். அந்தச் சமயத்தில் பலரும் பங்களாவில் இருப்பதைப் பார்த்தேன். நானும் பெரிய வீட்டிற்கு ஆசைப்பட்டு யோசித்து வாங்கிய வீடு இது.

அந்த வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.200 கோடி," என்று கூறினார். அந்த வீடு மட்டும் இல்லாமல் லண்டனில் அவருடைய வீடு ரூ.172 கோடி, துபாயில் இருக்கும் அவருடைய வீட்டின் மதிப்பு ரூ.24 கோடி, 'வேனிட்டி வேன்' ரூ.4 கோடி, 'ரோல்ஸ் ராய்ஸ் வாகனம் ரூ.4 கோடி என அவருடைய சொத்துகளின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. இவரின் சொத்து மதிப்பு அண்மையில் வெளிவந்ததில் இருந்து 'பாலிவுட்' முழுவதும் அதைப் பற்றிய பேச்சாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.