ஒரு பக்கம் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து, நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வரும் நயன்தாரா, மற்றொரு பக்கம் முன்னணி நாயகர்களுடனும் வழக்கமான நாயகி வேடங்களில் நடிக்கிறார். இந்நிலையில் அஜித்துடன் இவர் இணைந்து நடித்துள்ள 'விஸ்வாசம்' ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் நிரஞ்சனா எனும் கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருப்பதாகப் பாராட்டுகிறார் படத்தின் இயக்குநர் சிவா.
நயன்தாராவைப் போல் யதார்த்தமான நடிப்பை வழங்கும் நாயகிகள் கிடைத்தால் சாதாரண இயக்குநர் கூட பிரம்மாண்ட வெற்றிப் படத்தை உருவாக்கமுடியும் என்று சிவா பாராட்டுவதை 'விஸ்வாசம்' படக் குழுவும் ஆமோதிக்கிறது. "முதல்முறையாக என் படத்தில் நாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா. ஏற்கெனவே அவருடன் தெலுங்குப் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளேன். ஆனால் அப்போது நான் ஒளிப்பதி வாளராக மட்டுமே இருந்தேன். அந்த வகையில் எங்களுக்குள் முன்பே அறிமுகம் உண்டு. "அப்போது நான் பார்த்த நயன்தாராவுக்கும் இப்போது அவரைப் பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் தெரிகிறது. நடிப்பில் வெகுவாக முன்னேறி இருக்கிறார். எத்தகைய காட்சியாக இருந்தாலும் பிரமாதமான நடிப்பை அவரால் வழங்க முடிகிறது. அந்த வகையில் 'விஸ்வாசம்' படப்பிடிப்பின் போது அவரைப் பார்த்து வியந்தபடியே இருந்தேன்," என்கிறார் சிவா. ஒரு காட்சிக்கான சூழ்நிலையை விளக்கும் போது ஒன்றிரண்டு நிமிடங்களிலேயே நயன்தாரா அதைப் புரிந்துகொள்வதாகவும் அடுத்த நிமி டமே அக்காட்சியில் நடிக்க தயாராகிவிடுவதாக வும் குறிப்பிடும் சிவா, நயன்தாரா மேலும் பல உயரங்களைத் தொடுவார் எனவும் பாராட்டுகிறார்.
சரி... 'விஸ்வாசம்' படத்தின் கதை என்னவாம்? ஏற்கெனவே கதை குறித்து வெளியான பல தகவல்களில் எதுவுமே உண்மை அல்ல என்கிறார் சிவா. ரசிகர்கள் அவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார். "இது நகரம், கிராமப்புறம் என இரண்டு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நடக் கும் கதை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிச்சயம் படத்தை ரசிப்பார்கள். அந்த அளவு குடும்பத்துடன் திரையரங்கம் சென்று படம் பார்க்கும் வகையில் உருவாகி உள்ளது," என்று உத்தரவாதம் அளிக்கிறது சிவா தரப்பு.
தந்தைக்கும் மகனுக்குமான பாசப் பிணைப்பை அழகாகச் சொல்லும் 'கண் ணான கண்ணே' பாடல் ஏற்கெனவே வெற்றி பெற்றுள்ள நிலையில், பல ஆடவர்கள் தங்கள் மகளோடு இந்தப் பாடலை 'டப் ஸ்மாஷ்' செய்து இணையத் தில் உலவ விட்டிருப்பதாகச் சுட்டிக் காட்டுகிறார் சிவா. இம்முறை சண்டைக் காட்சிக ளிலும் நகைச்சுவையிலும் அசத்தியுள்ளாராம் அஜித். ஒளிப்பதிவு, உதவியாளர், லைட்மேன் தொடங்கி நாய கன் அஜித் வரை அனைவ ருமே கடினமாக உழைத்தி ருப்பதாகவும், படக் குழு வில் உள்ள ஒவ்வொரு வரையும் தட்டிக் கொடுத்து அஜித் உற் சாகப்படுத்தியதாகவும் பூரிப்புடன் விவரிக்கிறார் சிவா.
"ஒரு பாடல் காட்சி யில் இடைவிடாமல் தொடர்ந்து 40 நொடிக ளுக்கு நடனம் அமைத்தி ருந்தார் நடன இயக்குநர் கல்யாண். அதை பத்து, பத்து விநாடிகளாகப் படமாக்கலாம் என்று நான் கூறி னேன். காரணம், அஜித் ஏற்கெ னவே கால் வலியால் அவதிப்படு பவர். ஆனால் அவரோ இடை விடாமல் ஆட முயற்சிப்பதாகக் கூறினார். "நாங்கள் எல்லோரும் ஒரு வித தயக்கத்துடன் சம்மதிக்க, கடைசியில் அற்புதமாக நடன மாடி அனைவரையும் அசர வைத்தார் அஜித்," என்கிறார் இயக்குநர் சிவா.

