சாயிஷா: நடனம் என்பது உடற்பயிற்சி

சாயிஷா: நடனம் என்பது உடற்பயிற்சி

1 mins read
90966e25-eaf6-41bc-902a-83b77cf72467
-

தினமும் மூன்று மணி நேரமாவது நடனப் பயிற்சி மேற்கொள்கிறார் இளம் நாயகி சாயிஷா. இதன் காரணமாகவே தனது உடல் எடை அதிகரிக்கவில்லை என்று குறிப்பிடுபவர், இளம் நாயகிகள் தினமும் நடனப்பயிற்சி மேற்கொள்வது நல்லது என்கிறார். "ரசிகர்களிடம் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக மட்டும் நடனப் பயிற்சியில் ஈடுபடுவது இல்லை. என்னைப் பொறுத்தவரை இது நல்லதொரு உடற்பயிற்சி. இதனால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடிகிறது," என்று சொல்லும் சாயிஷா, சைவப் பிரியையாம். வெளியூர், வெளிநாடு என்று எங்கு சென்றாலும் சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்வாராம்.