பரிசுகளைப் பாதுகாக்கும் தமன்னா

பரிசுகளைப் பாதுகாக்கும் தமன்னா

1 mins read
a217689e-0ca7-444a-bdab-d2d465c8e24b
-
Google News Preferred Icon

இந்த ஆண்டு தனது பிறந்தநாளை மும்பையில் உள்ள வீட்டில் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார் தமன்னா. அவரது தாயார் அன்புப் பரிசாக வைர நகை ஒன்றைப் பரிசாக அளித்தாராம். ஆண்டுதோறும் தன் தாயிடம் இருந்து கிடைக்கும் பரிசுகளைத் தனி அறையில் பாதுகாத்து வைத்திருக்கிறார் தமன்னா. "சிரஞ்சீவியுடன் 'சய்ரா' தெலுங்குப் படத்தில் நடிக்கிறேன். ரவிவர்மாவின் ஓவியத்தில் காணப்படும் நளின மங்கை போல் இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் என்னைப் பார்க்கமுடியும். "இப்படக் குழுவினர் என்னுடைய கதாபாத்திரத்தின் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியது நெகிழவைத்துள்ளது," என்கிறார் தமன்னா. தற்போது தமிழில் வாய்ப்பு குறைந்துள்ளதால் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.