துருவ்: சாதிக்கவேண்டும் என்பதே கனவு

துருவ்: சாதிக்கவேண்டும் என்பதே கனவு

1 mins read
a6dcbfac-61b4-42c2-9d09-a90f5b2aea89
-

சிறு வயது முதலே சினிமாவில் சாதிக்கவேண்டும் எனும் கன வுடன் வலம் வந்ததாகச் சொல் கிறார் நடிகர் விக்ரமின் வாரிசான துருவ். 'வர்மா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகும் இவருக்கு ஜோடி யாக மேகா நடித்துள்ளார். அடுத்த மாதம் வெளியாக உள் ளது 'வர்மா'. பிரபல நடிகரின் மகன் என்ப தால் கோடம்பாக்கத்தில் கால் பதித்தபோது சில சிரமங்களை எதிர்கொண்டாராம் துருவ். அதன்பிறகு எல்லாவற்றையும் சமாளித்து, தற்போது வழக்க நிலை இருப்பதாகவும் கூறுகிறார். "துவக்கத்தில் கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஆனால் என் அப்பா இவ்வளவு கஷ்டப் பட்டதே எனக்காகவும் என் சகோதரிக்காகவும்தான். எனவே எனக்கான வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் அது வெட்கக்கேடு.

"சிறு வயதில் இருந்தே சினிமாதான் என் கனவு. என் அப்பாவின் பெயரைப் பயன்படுத்தி தான் சினிமாவுக்குள் வரவேண் டும் என்று நினைத்ததில்லை. எனவே சாதக பாதக அம்சங்கள் குறித்து எந்தவித கவலையும் இல்லை," என்று சொல்லும் துரு வுக்கு எதிர்காலத்தில் இயக்குநர் ஆகவேண்டும் என்ற கனவும் உள்ளதாம். ஓய்வுநேரம் கிடைத்தால் உடனே புகைப்படக் கருவியுடன் புகைப்படம் எடுக்க கிளம்பிவிடு கிறார். தற்போது இசையிலும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம். "அப்பாவை வைத்து ஒரு படத்தை இயக்கவேண்டும் என் பதும் என் லட்சியம். அவருக்காக சில கதைகளையும் தயார் செய்து வைத்துள்ளேன்," என்கிறார் துருவ்.