வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி உள்ளது 'கீ'

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி உள்ளது 'கீ'

1 mins read
50effef2-4af8-4395-b05c-5957f46b155e
-

ஜீவா கல்லூரி மாணவராக நடிக்கும் படம் 'கீ'. இதில் நிக்கி கல்ராணி, அனைகா சோடி என இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். கலீஸ் இயக்கும் இப்படத்தை தயாரிப்பவர் மைக்கேல் ராயப்பன். "இது அறிவியல் மற்றும் உளவியல் தொடர்பான படம். சற்றே வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக்கி உள்ளோம். விறுவிறுப்பான திரைக்கதையுடன் படம் நகரும். முன்பு இணையத்தில் வந்த ப்ளூவேல் விளையாட்டு விபரீதமாக அமைந்தது. அதைப் போன்றே இப்படத்திலும் சில திகிலான விஷயங்கள் அடங்கியிருக்கும். வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றும் கோவின் பத்மசூர்யாவின் நடிப்பு பாராட்டுகளைப் பெறும். படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் மார்ச் 16ஆம் தேதி இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்," என்கிறார் இயக்குநர் கலீஸ். இப்படம் தெலுங்கு மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியீடு காண இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் தமக்கு திருப்புமுனையாக அமையும் என்றும் ரசிகர்களை வெகுவாகக் கவரும் என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் எல்லாம் கூறிவருகிறாராம் ஜீவா. படங்கள், செய்திகள்: தமிழகத் தகவல் சாதனம்