திடீரென நடிக்க மறுத்த கதாநாயகி

திடீரென நடிக்க மறுத்த கதாநாயகி

1 mins read
650c2813-f47c-4b01-b698-909566ee6b3c
-

இந்திப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா எனப் பல நடிகைகள் ஏங்கிக் கிடக்க, தேடி வந்த நல்ல வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார் நடிகை டாப்சி. அனுராக் பாசு இயக்கும் இந்திப் படத்தில் இவரைத்தான் நாயகியாக ஒப்பந்தம் செய்திருந்தனர். இதில் அபிஷேக் பச்சன், ஆதித்ய ராய் கபூர் எனப் பல முன்னணி நடிகர்களும் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், தாம் விலகிக் கொள்வதாக டாப்சி திடீரென அறிவித்திருப்பது பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்தத் தேதிகளில் கால்‌ஷீட் ஒதுக்க வேண்டும்? என இப்படக் குழுவிடம் பலமுறை கேட்டாராம் டாப்சி. அதற்கு முறையான பதில் கிடைக்காததால் கடுப்பாகி விட்டாராம். இதன் விளைவாகவே படத்திலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் டாப்சி இவ்வாறு செய்தது சரியல்ல என்று விமர்சனம் எழுந்துள்ளது.