விஷால், தயாரிப்பாளர் மீது சிம்பு அவமதிப்பு வழக்கு

விஷால், தயாரிப்பாளர் மீது சிம்பு அவமதிப்பு வழக்கு

1 mins read
507dba47-c4e1-45f9-9d5a-926458a48e33
-

சிம்பு நடித்து வெளியான படம் அன்பானவன் அசராதவன் அடங் காதவன். இப்படத்தின் தயாரிப் பாளர் மைக்கேல் ராயப்பன். இதில் நடிக்க சிம்புவிற்கு எட்டு கோடி ரூபாய் சம்பளம் தருவதாகப் பேசப்பட்டதாம். ஆனால், படம் தோல்வியடையவே ஒன்றரை கோடி ரூபாய் மட்டுமே தனக் குத் தரப்பட்டதாக சிம்பு கூறியிருந்தார். இதன் தொடர்பில் சிம்புவும் மைக்கேல் ராயப்பனும் தயாரிப்பாளர் சங்கத் தில் புகார் அளித்திருந்தனர். ஆனால், தயாரிப்பாளர் சங்கத் தலைவரான நடிகர் விஷால், மைக்கேல் ராயப்பனுக்கு ஆதர வாக ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாகக் குற்றஞ்சாட்டினார் சிம்பு.

இதையடுத்து, விஷாலும் தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய மைக்கேல் ராயப்பனும் தனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு வழக்குத் தொடுத்தார். அம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்க மும் தயாரிப்பாளர் சங்கமும் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக சிம்பு தரப்பில் குற்றஞ்சாட்டப் பட்டது. புதிய படங்களில் தாம் ஒப்பந்தம் செய்துகொள்வதில் அவ்விரு சங்கங்களும் தலை யிடக்கூடாது என உத்தரவிடும் படியும் சிம்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இம்மாதம் 18ஆம் தேதிக்குள் விஷாலும் மைக்கேல் ராயப்பனும் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி கல்யாண சுந்தரம் உத்தரவிட்டார்.