தீபிகா பெயரில் இணையத்தளம்

தீபிகா பெயரில் இணையத்தளம்

1 mins read
4ad82e0c-5bbc-43df-b061-bf4219d000bc
-

இப்போதைய இந்தித் திரையுலக நடிகைகளிலேயே அழகானவர் எனக் கூறப்படும் தீபிகா படுகோனைப் பற்றித் தெரிந்துகொள்ள ரசிகர்கள் எப்போதுமே ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்காக அவர்கள் இனி இணையத்தை அலசி ஆராய வேண்டியிராது. ஏனெனில், தன்னைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் 'அப்டேட்' செய்யும் வகையில் www.deepikapadukone.com என தீபிகாவே தனக்கென ஓர் இணையத்தளத்தைத் தொடங்கி இருக்கிறார். அண்மையில் நடிகர் ரன்வீர் சிங்கைக் கைப்பிடித்த தீபிகா, திருமணத்திற்குப் பின்னும் நடிப்பைத் தொடரவுள்ளார்.