சிம்புவுக்கு ஜோடியாக ரா‌ஷி கண்ணா

சுந்தர்.சி. இயக்கத்தில் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தில் நடித்துவரும் சிம்பு, அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ‘மாநாடு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ரா‌ஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இவர் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்தவர். படத்தின் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்க நடிகர் அர்ஜூனுடன் பேச்சுவாரத்தை நடந்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் வழக்கம்போல் தன் தம்பி பிரேம்ஜிக்கும் ஒரு பாத்திரத்தை ஒதுக்கி இருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.