மன்னிப்பு கேட்டார் ஐஸ்வர்யா

நடிக்க வந்து குறுகிய காலத் திலேயே எந்த வேடம் கொடுத் தாலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிக்கக்கூடியவர் என்று பெயர் எடுத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனாலும் தலைக் கனமோ, அகங்காரமோ இல்லாமல் நட்பாகப் பழகக்கூடியவர் என்ற நல்ல பெயரையும் எடுத்துள்ளார். அப்படிப்பட்டவர், ‘கனா’ படத்தின் வெற்றிவிழாவில் பேசிய சில வார்த்தைகள் சர்ச்சையில் சிக்கவைத்துவிட்டன. இருந்தா லும் உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஐஸ்வர்யா, தமது பேச் சுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அவரின் நண்பர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகிய படம் ‘கனா’.

இளம்பெண் ஒருவர் தமது தந்தையின் கனவை நனவாக்கும் வகையில் கிரிக்கெட் விளையாட் டில் பிரகாசித்து, இந்திய அணியில் இடம்பிடிப்பதுதான் படத்தின் கதை. ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கனையாகவும் சத்யராஜ் அவரின் தந்தையாகவும் நடித் துள்ள இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து, படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடை பெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவருக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. படத்தின் நாயகி ஐஸ்வர்யா விழாவில் பேசியபோது, “இப்போது எல்லாம் வெற்றிபெறாத படத்திற்கு கூட வெற்றிவிழா கொண்டாடு கிறார்கள். நான் இந்தப் படத்தைச் சொல்லவில்லை. இது உண்மை யான வெற்றிப் படம்,” என்றார்.