திரைத்துறையில் கால்பதிக்கும் அடுத்த வாரிசு

பிரபல பட்டிமன்றப் பேச்சாளரான ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் திரைப்பட நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். ‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘தர்மதுரை’ படங்களுக்குப் பிறகு ‘மாமனிதன்’ மூலம் இயக்குநர் சீனு ராமசாமியுடன் மூன்றாவது முறையாகக் கைகோத்துள்ளார் விஜய் சேதுபதி. ஆட்டோ ஓட்டுநர் வேடத்தில் நடிக்கும் அவருக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். இசைஞானி இளையராஜாவுடன் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என அவரின் இரு மகன் களும் சேர்ந்து இந்தப் படத்திற்கு இசை அமைப்பதால் படம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.