விஸ்வாசம்: வேலூர் திரையரங்கில் அஜித் ரசிகர்கள் கைகலப்பு, கத்திக்குத்து

அஜித் நடிப்பில் பெரும் எதிர் பார்ப்புக்கு மத்தியில் ‘விஸ்­வாசம்’ படம் நேற்று வெளியானது. சிவா இயக்கத்தில் அஜித்து­டன் நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் நேற்று நள்ளிரவு சில திரையரங்கு­களில் வெளியா­னது. கண்விழித்­துப் பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். கோயம்பேடு ரோகிணி திரை­யரங்கம் உள்ளிட்ட சில திரை­யரங்குகளில் ரஜினி ரசிகர்களுக்­கும் அஜித் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. காவல்துறை உதவியுடன் அவர்கள் கட்டுப் படுத்தப்பட்டனர்.

வேலூர் ஓல்டு டவு­னில் உள்ள அலங்கார் திரையரங்­கில் ரசிகர்­கள் சிலர் நாக்கில் சூடம் ஏற்றி அஜித் படம் வெளி­யானதைக் கொண்டாடிய­தோடு வெற்றி பெற வழிபாடும் செய்தனர். அதே நேரத்தில் ரஜினியின் ‘பேட்ட’ படத்தை சீண்டுவதைப் போல், கட் அவுட் பதாகைகளில் வசனங்­களையும் ரசிகர்கள் அச்­சிட்டிருந்­தனர். வேலூர் ஓல்டு டவுனைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 20). இவரது உறவினர் ரமேஷ் (30) இருவரும் அஜித் ரசிகர்கள். வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள அலங்கார் திரை­யரங்கத்திற்கு ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சியில் படம் பார்க்கச் சென்ற­னர். அதிகாலை 4 மணிக்குக் காட்சிக்கு ரசிகர்கள் முண்டி­யடித்த­படி திரையரங்­கிற்குள் நுழைந்தபோது, பிரசாத்­துக்கும் மற்றொரு தரப்பில் வந்த அஜித் ரசிகர்களுக்கும் இருக்கை பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் கத்தியால் பிரசாத்தை வயிற்றில் குத்தியது. தலை, தோள்பட்டை ஆகிய இடங்களிலும் வெட்டினர். இத­னைத் தடுக்க வந்த ரமேஷையும் தலையில் கத்தியால் தாக்கினர்