சிங்கையில் தடபுடலாக தொடங்கிய ‘பேட்ட’

எஸ். வெங்கடேஷ்வரன்

நேற்று அதிகாலை சிங்கப்பூரில் பலர் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த போது சூப்பர்ஸ்டார் ரஜினி காந்தின் தீவிர ரசிகர்கள் சிலர் ‘பேட்ட’ திரைப்படத்தைப் பார்க்க தயாராகிக்கொண்டிருந்தனர். ரஜினிகாந்தின் புதிய படமான ‘பேட்ட’ சிங்கப்பூரில் நேற்றி லிருந்து திரையரங்குகளில் திரை யிடப்படுகிறது. நேற்று அதிகாலை 6 மணிக்குக் கிட்டத்தட்ட 300 ரசிகர்கள் ஷா டவர்சில் உள்ள கார்னிவல் திரையரங்கில் கூடி னர். படம் தொடங்குவதற்கு முன்பு அங்கு கூடியிருந்த ரசிகர்களின் கொண்டாட்டம் அவ்விடத்தைக் களைகட்ட வைத்தது. மேள தாளம் முழங்க, ரஜினிகாந்தின் ‘கட்அவுட்’டை திரையரங்கின் வாசலில் வைத்து அதற்கு மாலை அணிவித்து அழகு பார்த்தனர் ரசிகர்கள். அத்துடன் கொண்டாட்டம் நின்றுவிடவில்லை. தங்கள் செல்லத் தலைவரின் ‘கட்அவுட்’ டுக்கு மலர்களைத் தூவி வலம் வந்தனர்.

திரையரங்கின் வாசலில் ரஜினிகாந்தின் ‘கட்அவுட்’டுக்கு மாலை அணிவிக்கும் ரசிகர்கள். படம்: சிங்கப்பூர் ரஜினி மக்கள் மன்றம்