விஷால்: காதல் திருமணம் உண்மையே

விஷால் வீட்டில் விரைவில் கெட்டிமேளச் சத்தம் கேட்கப்போகிறது. ஆனால் ரசிகர்களும் திரை யுலகத்தினரும் நினைப்பதுபோல் அவர் நடிகை வரலட்சுமியைக் கைபிடிக்கவில்லை. ஆந்திராவைச் சேர்ந்த அனிஷா என்பவரைத்தான் காதலிக் கிறாராம். இந்த அனிஷாவுடன்தான் விரைவில் திருமணமாகப் போகிறது. நடிகர் சங்கத்துக்குச் சொந்தக் கட்டடம் கட்டி முடித்தபிறகுதான் தனது திருமணம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார் விஷால். அவருக்கும் வரலட்சுமிக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாகத் தகவல் வெளியானது. எனினும் அண்மைக் காலமாக இருவருமே அத்தகவலை மறுத்துவந்தனர்.

இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிஷா ரெட்டியுடன் விஷாலுக்குத் திருமணம் நடைபெற உள்ளது. இவர் விஜய்ரெட்டி என்ற தொழிலதிபரின் மகளாவார். “எனக்கும் அனிஷாவுக்கும் திருமணம் என்று வெளியான தகவல் உண்மைதான். இது காதல் திருமணம். எனினும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகக் கூறுவது தவறு. “எங்களது பெற்றோர்கள் சந்தித்துப் பேச உள்ளனர். அப்போதுதான் நிச்சயதார்த்தம், திருமணம் குறித்து முடிவு செய்யப்படும்,” என்று தெரிவித்துள்ளார் விஷால்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்