அதோ அந்த பறவை போல

அதோ அந்த பறவை போல

1 mins read
51c0b6eb-9848-49c5-b3b7-6627d868d5e4
-

'அதோ அந்த பறவை போல' என்ற தலைப்பில் உருவாகும் படத்தை அறிமுக இயக்குநர் வினோத் இயக்கி உள்ளார். காட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் அமலா பால். "காட்டுக்குள் டிரெக்கிங் செல்லும் இளையர்கள் அதிகரித்து வருகின்றனர். அப்படிச் செல்லும்போது மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போக வேண்டும். இல்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பது பலருக்குத் தெரியவில்லை. ஆண்கள் தனியாகச் சென்றாலே சிக்கல் என்ற நிலையில், ஓர் இளம்பெண் தனியாக காட்டுக்குள் சென்றால் என்ன ஆகும் என்பது தான் கதை. இதில் நாயகியாக அமலா பால் நடித்துள்ளார். காட்டுக்குள் கேரவன் போன்ற வசதிகளைச் செய்துதர முடியவில்லை. தினமும் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். காட்டில் சந்திக்கும் அனைத்துவித அசௌகரியங்களையும் அவரும் எதிர்கொண்டார். ஆனால் ஒருமுறை கூட முகம் சுளிக்கவில்லை. இந்தப் படம் அமலா பாலின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படைப்பாக இருக்கும்," என்கிறார் இயக்குநர் வினோத்.