தினேஷ் ஜோடியாக நடிக்கும் ஆனந்தி

தினேஷ் ஜோடியாக நடிக்கும் ஆனந்தி

1 mins read
8f536804-92ac-4b7d-a895-e7feeaf022af
-

'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' என்ற தலைப்பில் உருவாகும் புதுப்படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் கயல் ஆனந்தி. அதியன் ஆதிரை இயக்குகிறார். இவர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தன் சிஷ்யனுக்காக நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரஞ்சித்தே இப்படத்தைத் தயாரிக்கிறார். 'அட்டகத்தி' தினேஷ் நாயகனாக நடிக்க, அனேகா, ரித்விகா, முனீஸ்காந்த், ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளனர். ஒரு லாரி ஓட்டுநர் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்புதான் இப்படத்தின் கதையாம். இப்படம் உலக அரசியலைப் பேசும் என்கிறார் அதியன் ஆதிரை.