'வேதமானவன்'

'வேதமானவன்'

1 mins read
969eb359-18cd-4d3d-a360-16badc7a3518
-

ஒரு தூக்குத் தண்டனை கைதி விடுதலை பெற்று வெளியே வரும்போது அவனைச் சமுதாயம் ஏற்றுக்கொள்கிறதா என்பதை அலசும் படமாக உருவாகி உள்ளது 'வேதமானவன்'. நீதிபதி புகழேந்தி இயக்கியுள்ளார். ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப் படத்தை உருவாக்கி உள்ளாராம். இதில் நாயகனாக மனோ ஜெயந்த் நடிக்க, நாயகியாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஊர்வசி ஜோ‌ஷி நடித்துள்ளார். மேலும், டெல்லி கணேஷ், போண்டா மணி, பெஞ்சமின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங் களை ஏற்றுள்ளனர். செளந்தர்யன் இசையமைக்க, கண்ணன் ஒளிப் பதிவு செய்துள்ளார். "எனது பணிக்காலத்தில் பல் வேறு வழக்குகளுக்குச் சட்டப்படி தீர்ப்பு அளித்துள்ளேன். அந்த அனுபவம் இந்தப் படத்தை இயக்குவதில் கைகொடுத்துள் ளது. "நல்ல கருத்தைச் சொல்ல முடியும் என்பதால் இந்தப் படத்தைச் சொந்தமாக தயாரித்து இயக்கி உள்ளேன். தலைப்புக்கு ஏற்ப இந்தப் படம் சமூகத்துக்கான வேதமாக இருக்கும்.

"பாடல்கள் சிறப்பாக அமைந் துள்ளன. அவற்றை நானே எழுதி உள்ளேன். நிஜத்தில் நான் வழங்கிய தீர்ப்புக் காட்சி போல் இந்தப் படத்தில் ஒருகாட்சி இடம் பெறுகிறது. நீதிபதி வேடத்தில் நானே நடித்துள்ளேன்.

"படத்தில் நடித்தவர்கள் புது முகங்களாக இருந்தாலும், மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்ததால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்த முடிந்தது," என்கிறார் நீதிபதி புகழேந்தி.