முதல் முறையாக கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார் சிம்பு. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. சங்கர் இயக்கத்தில் 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் 'இந்தியன்'. இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார் சங்கர். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கும் வேடத்தில் நடிக்க உள்ளாராம் கமல். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் சிம்புவையும் ஒப்பந்தம் செய்துள்ளாராம் சங்கர். கதைப்படி கமலுக்குப் பேரனாக அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தனது கதாபாத்திரம் குறித்து அறிந்த சிம்பு உற்சாகம் அடைந்துள்ளாராம். 'இந்தியன்-2' படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என சங்கர் தரப்பில் கூறப்படுகிறது.
கமல்ஹாசனின் பேரனாக நடிக்கும் சிம்பு
1 mins read
-

