இளம் ரசிகர்களுக்கு அபர்ணா பாலமுரளியை நன்கு தெரிந்திருக்கும். அண்மையில் வெளியான 'எட்டு தோட்டாக்கள்' வழி தமிழ்த் திரையுலகில் கால்பதித்தவர். மலையாளத்தில் குறுகிய காலத்திலேயே தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். நல்ல நடிகை என்ற பெயரையும் சம்பாதித்துள்ளார். இவர் நடிப்பில் தமிழில் அடுத்து உருவாகி உள்ள படம் 'சர்வம் தாள மயம்'. ராஜீவ் மேனன் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியுள்ள படம் இது. தமிழில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக ஒரு செய்தி வெளியானதே? என்று கேட்டால் பதறியபடி மறுக்கிறார்.
"மலையாளம் என் தாய்மொழி. அங்குதான் திரை யுலகில் அறிமுகமானேன். மலையாளத்தில் எனக்கென சில வாய்ப்புகள் தேடி வருகின்றன. அதேசமயம் தமிழில் நடிக்க வேண்டும் எனும் விருப்பமும் உள்ளது. எனது முதல் தமிழ்ப் படமான 'எட்டு தோட்டாக்கள்' நல்ல பெயரைப் பெற்றுத் தந்தாலும் எனது கதாபாத்திரம் ரொம்பச் சின்னதுதான். ஆனால், அந்த மாதிரி ஒரு படத்தில் நானும் ஓர் அங்கமா இருந்ததே பெரிய விஷயம்.

