இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றி பெறுவதற்கு ஒரு குத்துப் பாடலும் அதில் நடனமாட ஒரு முன்னணி நாயகி ஒப்புக் கொண்டால் போதும் என்றாகிவிட்டது. அந்த வகையில் கிருஷ்ணா நடிப்பில் உருவாகி உள்ள 'கழுகு- 2' படத்திலும் ஒரு குத்துப் பாடல் இடம்பெற்றுள்ளது. இதில் கிருஷ்ணாவுடன் இணைந்து குத்தாட்டம் போட்டிருப்பவர் யாஷிகா ஆனந்த். 'சகலகலாவல்லி' என்று தொடங்கும் இந்தப் பாடல் இளையர்களை வெகுவாகக் கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். விரைவில் திரை காண உள்ள இப்படத்திற்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் இப்படக் குழுவினர் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளனர்.
'சகலகலாவல்லி' பாடலில் யாஷிகா
1 mins read
-

