"என்னுடன் இதுவரை நடித்த தொழில்முறை சக நடிகைகளில் மிகச் சிறந்தவள் இவள்தான்," என்று குறிப்பிட்டு நடிகை வரலட்சுமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தப் பதிவில் ஒரு நாயின் படம் இடம்பெற்றுள்ளது. 'டேனி' படத்தில் வரலட்சுமியுடன் இணைந்து நடித்திருக்கிறதாம். இப்படத்தில் வரலட்சுமியின் கதாபாத்திரத்துடன் படம் முழுவதும் இணைந்து பயணிக்கும் விதமாக இந்தச் செல்லப்பிராணியின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. "சிறந்த தொழில்முறை நடிகையான இவளுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மிகவும் விருப்பமான ஒன்றாக உள்ளது," என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் வரலட்சுமி. அறிமுக இயக்குநர் சந்தானமூர்த்தி இயக்கும் 'டேனி'யின் படப்பிடிப்பு கடந்த 7ஆம் தேதி துவங்கியது. இதுவரை நாயகியாக, வில்லத்தனமாக நடித்து வந்த வரலட்சுமி, 'டேனி'யில் முதல்முறையாக நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
சிறந்த நடிகை: பாராட்டும் வரலட்சுமி
1 mins read
-

