'ஹிப்ஹாப்' தமிழா ஆதி நாயகனாக நடிக்கும் புதிய படம் 'நட்பே துணை'. இதில் அவருக்கு ஜோடியாக அனகா நடித்துள்ளார். மேலும் கரு பழனியப்பன், ஆர்.ஜே.விக்னேஷ் கான் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் 'யூடியூப்' புகழ் தங்கதுரை, பிஜிலி ரமேஷ், ராஜ்மோகன், விஜய் ஆகியோரும் படத்தில் உள்ளனர். பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இப்படத்தை சுந்தர்.சி தயாரிக்கிறார். இவர் 'ரெமோ', 'மான் கராத்தே' உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இறுதிக்காட்சியை மட்டும் இருபது நாட்கள் படமாக்கி உள்ளார்களாம்.
சுந்தர் சி. தயாரிப்பில் ஆதி நாயகனாக நடிக்கும் படம் 'நட்பே துணை'
1 mins read
-

