அனைவரையும் திருப்திப்படுத்த வருகிறது 'காஞ்சனா 3'

அனைவரையும் திருப்திப்படுத்த வருகிறது 'காஞ்சனா 3'

1 mins read
1e244596-88f6-47d1-93e2-d671a081e15c
'காஞ்சனா-3' படத்தின் படப்பிடிப்பில் ராகவா லாரன்ஸ். -

'காஞ்சனா 3' படத்தின் வெளி யீடு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இதனால் பேய்க் கதைகளை விரும்பி ரசிப்போர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு 'முனி' என்ற படத்தை வெளி யிட்டிருந்தார் ராகவா லாரன்ஸ். அதன் மூன்றாம் பாகமாக உரு வாகி வருகிறது 'காஞ்சனா 3'. இதில் வேதிகா மற்றும் ஓவியா நாயகிகளாக நடித்துள்ளனர். படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் முடிவடைந்து ஏப்ரல் 14 சித்திரைப் புத்தாண்டையொட்டி படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். அதில் சிறிய மாற்றம் செய்து ஏப்ரல் 19ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இதில் நிகிதா, கபீர் துஹான் சிங், சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. முந்தைய பாகங்களில் நகைச் சுவை நடிப்பால் கவர்ந்த கோவை சரளா, மனோ பாலா, தேவதர்‌ஷினி, ஸ்ரீமன் ஆகிய நால்வரும் இந்தப் படத்திலும் அசத்தி உள்ளனர்.