ராய் லட்சுமி நாயகியாக நடித்து வரும் 'சின்ட்ரெல்லா' படத்தில் சாக்ஷி அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். இது வினோத் வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் படம். ஏற்கெனவே முப்பது விழுக்காடு படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். இந்நிலையில் சாக்ஷி, பாடகியும் நடிகையுமான உஜ்ஜைனி ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளனர். "சாக்ஷியின் கதாபாத்திரம் படம் முழுவதும் வருவது போல் அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு இக்கதாபாத்திரம் மர்மமான ஒன்றாகத் தோன்றும். தனது வேடத்தை நன்கு உள் வாங்கிக் கொண்டு படப்பிடிப்பில் அசத்தி வருகிறார் சாக்ஷி. "உஜ்ஜைனி யார் என்பது ரசிகர்களுக்குத் தெரியும். 'அழகிய தமிழ் மகன்', 'இருமுகன்' உள்ளிட்ட படங்களில் மனதை வசீகரிக்கும் பாடல்களைப் பாடியவர். அவரும் கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைக் கச்சிதமாக வழங்குகிறார்," எனப் பாராட்டுகிறார் இயக்குநர் வினோத் வெங்கடேஷ்.
'சின்ட்ரெல்லா'வில் இணைந்த சாக்ஷி
1 mins read
-

