'பேட்ட' படத்தை ரஜினி ரசிகர் களால் மட்டுமின்றி விஜய் சேதுபதியின் ரசிகர்களாலும் நீண்ட காலத்துக்கு மறக்க இயலாது. அதில் வில்லனாகத் தோன்றியவர் அடுத்து 'மாமனிதன்' படத்தில் ஆட்டோ ஓட்டுநராக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் மீண்டும் சேதுபதியின் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் காயத்ரி. மேலும் குழந்தை நட்சத்திரம் மானஸ்வி, குரு சோமசுந்தரம் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். 'தர்மதுரை'யைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கும் படம் இது. யுவன் சங்கர் ராஜா, தனது தந்தை இளையராஜாவுடன் இணைந்து பாடல்களுக்கு மெட்டமைத்து வருகிறார். மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்படிப்பு நடைபெற உள்ளது. அடுத்து தனது நடிப்பில் உருவாகி வரும் 'சூப்பர் டீலக்ஸ்', 'சேதுபதி' இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படங்களின் வெளியீட்டை எதிர்பார்த்து இருக்கிறார் விஜய் சேதுபதி.
ஆட்டோ ஓட்டுநரான விஜய் சேதுபதி
1 mins read
-

