நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகி வருகிறது 'காட்டேரி'. கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி படத்தை இயக்கி உள்ளார் டிகே. படத்தின் கதாநாயகன் வைபவ். வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பஜ்வா, மணாலி ரதோட் என படத்தில் நான்கு நாயகிகள் உள்ளனர். கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், 'யூடியூப் ' புகழ் சாரா உள்ளிட் டோரும் இதில் உள்ளனர். படம் முழுவதும் திகில் காட்சிகள் நிறைந்திருக்குமாம். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் நகைச்சுவைக்கும் குறைவிருக்காதாம். "படப்பிடிப்பு தற்போது நிறை வடைந்துள்ளது. இதையடுத்து தொழில்நுட்பப் பணிகள் துவங்கி யுள்ளன. மிக விரைவில் அவை நிறைவுபெறும்.
'காட்டேரி' படத்தில் வைபவ், சோனம் பாஜ்வா.

