அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், பிரபுதேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் 'சார்லி சாப்ளின் 2' எதிர்வரும் 25ஆம் தேதி வெளியாகிறது. ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார். முதல் பாகத்தின் நாயகனான பிரபுதேவாவே இரண்டாம் பாகத்திலும் நாயகனாக நடித்திருக்கிறார். இரண்டாவது நாயகியாக நடித்திருப்பவர் அதா சர்மா. முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, ரவிமரியா, டி.சிவா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் நடித்திருக்கிறார்கள். அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.
25ஆம் தேதி வெளியாகிறது 'சார்ளி சாப்ளின் 2'
1 mins read
-

