தமிழ்த் திரையுலகில் 1980, 90களில் முன்னணி இயக்குநராகவும் திரைக்கதையாசிரியராகவும் இருந்தவர் பாக்யராஜ். பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். தற்போது சின்ன வீடு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார். அவரது நடிப்பு, இயக்கத்தில் 'சின்ன வீடு' படம் 1985ல் வெளியானது. விருப்பம் இல்லாமல் குண்டான பெண்ணை மணந்து தவிக்கும் இளைஞன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை அந்தப் படம் மையப்படுத்தி இருந்தது. அது வெற்றிகரமாக ஓடி அப்போது வசூலைக் குவித்தது. தற்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்ன வீடு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் பாக்யராஜ். படத்துக்கான திரைக்கதையை அவர் தயார் செய்துள்ளார். மற்ற நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
பாக்யராஜின் 'சின்ன வீடு 2'
1 mins read
-

