படத்துக்குப் படம் வித்தியாசம், கெத்து காட்டும் விஜய் சேதுபதியின் புதிய படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கிதுரை பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி. 'பேராண்மை', 'புறம்போக்கு' படங்களில் இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை உள்வாங்கி நடித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் சேதுபதிக்கு இந்தப் படத்தில் இதுவரை ஏற்றிராத வேடமாம். விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். நடிகைகள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் அனைத்துலக அளவிலான ஒரு பிரச்சினையைப் பற்றி அலசுவதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. படம் பற்றி இயக்குநர் ரோகாந்த், "இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார். கிறிஸ்மஸ், புத்தாண்டு, காதல் எனப் பல கொண்டாட்டங்களை மையமாகக் கொண்ட படம் இது. "இந்தக் கொண்டாட்டங்களுக்குப் பின்னால் இருக்கிற அனைத்துலக அளவிலான பிரச்சினைகளைப் பேசுகிற படமாக இது இருக்கும். விஜய் சேதுபதி இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பொருட் செலவில் தயாரிக்கப்படும் பட மாக இது இருக்கும்," என்றார். மூணாறு, கொடைக் கானல், ஊட்டி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இடங் களில் படப்பிடிப்பு நடத்தப் படுகிறது. மேலும், இந்த படத்திற்காக 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த பிரம்மாண்ட மான தேவாலயம் போன்ற செட் ஒன்று வடிவமைக்கப் படவுள்ளது. நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்திற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவுப் பணிகளைக் கவனிக் கிறார். ஜான் பிரிட்டோ கலை இயக்கத்தை கவ னிக்கிறார். 'மிரக்கிள்' மைக்கேல் சண்டைக் காட்சிகளை வடி வமைக்கவுள்ளார். 'மாமனிதன்' படப்பிடிப்பில் தற்போது ஈடுபட்டுள்ளார் விஜய் சேதுபதி.
அதிக பொருட்செலவில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்
2 mins read
-

