சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி இருக்கும் 'கண்ணே கலை மானே' படத்தைப் பார்த்து நடிகர் விஜய் சேதுபதி பாராட்டியிருக்கிறார். 'தென்மேற்கு பருவகாற்று' படத்தின் மூலமாக விஜய் சேதுபதியைக் கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப் படுத்தியவர் இயக்குநர் சீனு ராமசாமி. 'கண்ணே கலைமானே' படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் அவரே என்பது கூடுதல் செய்தி. மதுரை வாடிப்பட்டி, பெரு மாள்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 'கண்ணே கலைமானே' படத்தின் பெரும் பாலான காட்சிகள் படமாக்கப் பட்டன. இதற்கிடையில், சீனு ராமசாமியின் 'கண்ணே கலைமானே' படத்தைப் பார்த்த விஜய் சேதுபதி, படம் மண் வாசனையுடன் எடுக்கப்பட்டிருப் பதாகக் கூறி சீனு ராமசாமியைக் கட்டியணைத்து கண்கலங்கி இருக்கிறார். சீனு ராமசாமி இயக்கும் 'மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தேனி பகுதியில் படப்பிடிப்பு மும் முரமாக நடைபெற்று வருகிறது.
'மண்மணம் வீசும் திரைப்படம்'
1 mins read
-

