மஞ்சிமா: கோபம் ஏற்பட்டது

மஞ்சிமா: கோபம் ஏற்பட்டது

1 mins read

பாலியல் ரீதியிலான தொல்லைகளைத் தாம் இதுவரை எதிர் கொண்டதில்லை என்கிறார் நடிகை மஞ்சிமா மோகன். சிலரது 'மீ டூ' அனுபவங்கள் நம்பக்கூடியதாகவும் சிலரது குற்றச்சாட்டுகள் நம்ப முடியாத அளவிலும் உள்ளதாக அவர் கூறியுள்ளார். "எனினும் பாலியல் தொல்லை கள் குறித்து முதன்முதலாகக் கேள்விப்பட்ட போது கடும் கோபம் ஏற்பட்டது," என்று சொல்லும் மஞ்சிமா, 'அச்சம் என்பது மடமையடா' மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர். தற்போது, இந்தியில் வெளியான 'குயின்' படத்தின் மலையாள மறுபதிப்பில் முதன்மைக் கதா பாத்திரத்தில் நடித்துள்ளார்.