‘அஜித்தின் ரசிகர்கள் அவரை பின்பற்ற வேண்டும்’

'விஸ்வாசம்' படத்தின் கதாநாய கன் அஜித், அதன் இயக்குநர் சிவா மற்றும் படக்குழுவினரை காவல்துறை அதிகாரி ஒருவர் வெகுவாகப் பாராட்டி உள்ளார். சென்னை பெருநகர காவல் துணை ஆணையரான அர்ஜுன் சரவணன் அண்மையில் 'விஸ்வா சம்' படத்தைப் பார்த்துள்ளார். இதையடுத்து அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கருத்தைப் பலரும் வரவேற் றுள்ளனர். அண்மையில் வெளியான 'விஸ் வாசம்' படத்தைப் பார்க்கும் வாய்ப்பு தமக்குக் கிடைத்தது என்றும், அதன் கதை, இடம்பெற்றுள்ள பாடல்கள், கலைஞர்களின் நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் தமக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இந்தப் படத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டா யமாக தலைக்கவசம் அணிந்து செல்வது, கதாநாயகன் கார் ஒட்டும்போதெல்லாம் இருக்கை வார் அணிந்து செல்வது, தனது மகளின் உயிரைக் காப்பாற்றச் செல்லும் அவசரத்தில்கூட இருக்கைவார் அணிய மறக்காதது, பெற்றோர் தங்களது கனவுகளைக் குழந்தைகள் மீது திணிக்காமல், அவர்கள் கனவு களை எட்ட துணை நிற்க வேண்டுவது ஆகியவை என்னை வெகுவாகக் கவர்ந்த காட்சிகள்," என அர்ஜுன் சரவணன் பாராட்டி உள்ளார்.

இந்தியாவில் சாலை விபத்துக ளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ள அவர், விபத்துகளைக் குறைப்பதில் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். "பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அஜித் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி நடிக்கின் றனர். எனவே, அவரது ரசிகர்களும் இந்த வழக்கத்தைப் பின் பற்ற வேண்டும் என்பதே எனது ஆசை," என துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் மேலும் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!