சேதுபதி நடிக்கும் புதுப் படம் 'சிந்துபாத்'

சேதுபதி நடிக்கும் புதுப் படம் 'சிந்துபாத்'

1 mins read

விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரது 26ஆது படமாக உருவாகிறது 'சிந்துபாத்'. அருண்குமார் இயக்குகிறார். அவர் ஏற்கெனவே 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' ஆகிய இரு படங்களை இயக்கியவர். இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியும் தற்போது வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் இசையமைக்க, சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்க உள்ளார். கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் இப்படம் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது.