அண்மைக் காலமாக இணைய உலகில் உலா வரும் நடிகர், நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. இணைய உலகில் தற்போது சினிமாவில் இணைந்திருப்பவர் நடிகை நந்திதா. 'தேவி 2' உள்ளிட்ட படங்களில் நடித்துக்கொண்டிருப்பவர் தனது பெயரை நந்திதா ஸ்வேதா என்று மாற்றிவிட்டாராம். தன் பெயரில் வேறு சில நடிகைகளும் இருப்பதால்தான் இந்தப் பெயர் மாற்றமாம்.
"எனது இயற்பெயர் ஸ்வேதா. கன்னடப் படங்களில் நடிப்பதற்காக நந்திதா என்று பெயர் மாற்றம் செய்தனர். அங்கு முதல் படம் வெற்றி பெற்றதும் அதே பெயரில் தமிழிலும் அறிமுகமானேன். எனக்கும் அந்தப் பெயர் பிடித்திருந்தது. ஆனால் நந்திதாதாஸ், நந்திதா ராஜ் என்று மேலும் சில நடிகைகள் இருந்ததால் இவ்வாறு பெயர் மாற்றிக் கொண்டேன். ஒரு விஷயம் தெரியுமா இப்போது என் வீட்டிலும்கூட நந்திதா என்றுதான் அழைக்கிறார்கள்," என்று சிரிக்கிறார் நந்திதா ஸ்வேதா.
அண்மையில் தன் பெயரில் யுடியூப் அலைவரிசை ஒன்றை தொடங்கியுள்ளாராம். அதில் அவர் வெளியிடும் காணொளி பதிவுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அண்மையில் படப்பிடிப்புக்காக மொரிஷியஸ் சென்று வந்த அவர், அது குறித்த காணொளியை 'மொரிஷியஸ் டைரி' என்ற தலைப்பில் வெளியிட, ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு. "முதன் முறையாக மொரிஷியஸ் சென்று வந்தேன். அம்மாவும் உடன் வந்திருந்தார். அந்த வகையில் இது மறக்கமுடியாத பயணம்.

