விஜய் நடிப்பில் உருவாகும் புதுப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தாம் ஒப்பந்தமாகி இருப்பதாக இளம் நாயகன் கதிர் தெரிவித்துள்ளார். நடிகராக விஜய்யை தமக்கு ரொம்பப் பிடிக்கும் என அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். "விஜய் அண்ணா மிகச்சிறந்த மனிதர். நல்ல பழக்கவழக்கங்கள் கொண்ட அவரை எப்போதுமே தூரத்தில் இருந்து ரசித்து வந்தவன் நான். அவருடன் இணைந்து நடிப்பது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
"இயக்குநர் அட்லி எனது நண்பர் என்பதுடன் எனது வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர். நல்ல படங்களில் நடித்தால் உடனே கூப்பிட்டுப் பாராட்டுவார். திடீரென ஒருநாள் அழைத்து விஜய் சார் படத்தில் உனக்கும் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது என்று சொன்னபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது," என்று பூரிப்புடன் சொல்கிறார் கதிர். 'தளபதி 63' படத்தில் தாம் ஏற்றுள்ள கதாபாத்திரம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்கிறார் கதிர்.

