விஜய்யுடன் மீண்டும் இணையும் நயன்தாரா

விஜய்யுடன் மீண்டும் இணையும் நயன்தாரா

1 mins read
19ec15b1-d1a4-43c6-994c-afabac7c8589
-
Google News Preferred Icon

'சர்கார்' படத்தை அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் 63வது புதிய படத்தின் பூசை சென்னையில் போடப்பட்டது. 'தெறி', 'மெர்சல்' படங் களைத் தொடர்ந்து மூன்றா வது முறையாக நடிகர் விஜய் யும் இயக்குநர் அட்லீயும் இப் படத்தில் இணைய உள்ளனர். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இவருடன் மேலும் இரு நாயகிகளும் இப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் இதற் காக கீர்த்தி சுரேஷ், ஆத்மிகா விடம் பேசிவருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசை யமைக்கிறார். ஏஜிஎஸ் என்டர் டெய்ன்மென்ட் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. விவேக், ஆனந்தராஜ், 'பரி யேறும் பெருமாள்' கதிர் ஆகி யோரும் நடிக்கின்றனர். இந்தப் படம் காற்பந்து விளையாட்டை மையமாக வைத்துத் தயாராவதாக தகவல் கசிந்துள்ளது. இதில் விஜய் பெண்கள் காற்பந்து பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.