தயாரிப்பாளர் சங்கத்தைப் பாடலில் மிரட்டும் சிம்பு

தயாரிப்பாளர் சங்கத்தைப் பாடலில் மிரட்டும் சிம்பு

2 mins read
d8b3649a-25fd-4388-9680-007ec3a1e32d
-

சிம்பு நடித்த 'அன்பானவன் அச ராதவன் அடங்காதவன்' படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். இந்தப் படத்தில் சிம்பு தலை யீட்டின் காரணமாகவும் அவர் சரியான ஒத்துழைப்பு கொடுக்காத தாலும் தனக்கு ரூ. 20 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக தயா ரிப்பாளர் சங்கத்தில் ராயப்பன் புகார் அளித்தார். இந்தப் புகார் குறித்த விசா ரணைக்கு சிம்பு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் தயாரிப்பாளர் சங் கம் சிம்புக்கு 'ரெட் கார்ட்' போட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதனைத் தயாரிப்பாளர் சங்கம் முறைப்படி அறிவிக்க வில்லை. அந்த நேரத்தில் "எனக்கா ரெட் கார்ட், எடுத் துப்பாரு என் ரெக்கார்ட்," என்று அறிக்கை விட்டார் சிம்பு. இந்நிலையில் சிம்பு நடித்துள்ள 'வந்தா ராஜாவாதான் வருவேன்' என்ற படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிம்பு தயாரிப்பாளர் சங்கத்துக்கு மறைமுகமாக மிரட்டல் விடுக்கும் வரிகள் இடம்பெற்றுள்ளன. "எனக்கா ரெட்கார்டு,

எடுத்துப்பாரு ரெக்கார்டு.

உள்ள விடமாட்டேன்னு

சொல்லுறதுக்கு நீ யாரு?

வெளியே நான் போடும் ஆட்டத்துக்கு இப்ப கூட்டத்த பாரு.

"பட்டத பட்டுன்னு சொன் னாக்கா, என்ன கெட்டவன்னு சொல்றாங்க.

"ஓரமா போயி உட்கார்ந்தா என்ன உத்தமன்னு சொல்றாங்க.

"தப்புன்னு தெரிஞ்சா டப்புன்னு கொதிக்கும் பிரச்சினை எனக்குப் பாயாசம்.

"என்ன உரசி பார்த்தா நீ நாசம். சேத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டுப் போனாலும் கேட்டுல நிக்கிற ஆள் இல்லடா.

நான் தனி ஆள் இல்லடா," என்று அந்தப் பாடலில் வரிகள் இடம்பெற்றுள்ளன.

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படக்காட்சியில் சிம்பு, மேகா ஆகாஷ்.