9 மாணவிகளின் ஆசையை நிறைவேற்றிய இளையராஜா

9 மாணவிகளின் ஆசையை நிறைவேற்றிய இளையராஜா

1 mins read
550984f9-76ce-4051-b1e3-4e4994aebd3c
Photo: Vijay Antony/Twitter -

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் 'தமிழரசன்' படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி இளையராஜா, அந்தப் படத்தின் மூலம் கல்லூரி மாணவிகள் ஒன்பது பேரின் ஆசையை நிறை வேற்றி வைத்துள்ளார். இளையராஜாவின் 75வது பிறந்தநாள் பல கல்லூரிகளிலும் விழாவாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அண்மையில் இரு மகளிர் கல்லூரி விழாக்களில் இளையராஜா கலந்துகொண்டார். அப்போது கல்லூரி மாணவிகள் சிலர் பாடல்களைப் பாடியதுடன் அவரது இசையில் தாங்கள் பாட விரும்புவதாகவும் அது தங்கள் கனவென்றும் கூறியிருந்தனர். இந்நிலையில், அந்த இரண்டு கல்லூரியிலும் இசை விருப்ப முள்ள, பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்துக் குரல் சோதனை நடத்தி, அவர் களில் பாடும் திறன் கொண்ட ஒன்பது மாணவிகளை இளைய ராஜா தேர்வு செய்ததுடன் விரை வில் அவர்களுக்குப் பாட வாய்ப் பளிப்பதாகவும் உறுதி அளித்தார். அதன்படி பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் 'தமிழரசன்' படத்தில் அந்த ஒன்பது மாணவிகளையும் பாடவைத்து அறிமுகப்படுத்தி உள்ளார் இளையராஜா.