ஜான்சி ராணி லட்சுமிபாய் என்று கூறியவுடனே அனைவருக்கும் தனது குழந்தையை முதுகில் சுமந்தபடி போரிட்ட வீரமங்கையின் நினைவு தான் வரும். இந்தியாவில் ஆங்கிலேயரை திறமையுடன் எதிர்த்துப் போராடிய இந்த வீரமங்கை ஜான்சிராணி லட்சுமிபாயாக 'மணிகர்னிகா' படத்தில் நடித்துள்ளார் தேசிய விருது பெற்றுள்ள கங்கனா ரணாவத். இந்தியிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படம் தொடர்பில் கங்கனா ரணாவத்துக்கு மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வடஇந்தியாவில் இயங்கிவரும் கர்னி சேனா என்ற அமைப்பின் தலைவர் லோகேந் திர சிங், படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குநருக்கு மிரட்டும் தொனியில் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். "படத்தை விளம்பரம் செய்வதற்கு கங்கனா எங்கள் அமைப்பின் பெயரைப் பயன்படுத்து கிறார். 'மணிகர்னிகா' படத்திற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் கங் கனா தொடர்ந்து எங்களைக் குறைகூறினால் அவரின் திரை வாழ்க்கையையே நாங்கள் நாசம் செய்துவிடுவோம்," என்று தனது அமைப்பின் சார்பில் அவர் எச்சரித்துள்ளார். "ஜான்சி ராணி மிகப்பெரிய வீரத்துக்குச் சொந்தக்காரி. 'மணிகர்னிகா' படத்தில் அவர் ஆங்கிலேயரை காதலிப்பது போலவும் ஆங்கிலேயர்களுக்கு மத்தியில் அவர் நடனமாடுவது போலவும் காட்சி அமைப்புகள் இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. "ஒரு வீரப் பெண்மணியைக் கேவலமாக படத்தில் சித்திரிப்பதை ஏற்கமுடியாது. அத னால் படம் வெளியாவதற்கு முன்பு எங்க ளுக்குப் படத்தை போட்டுக் காண்பிக்க வேண்டும். அதில் ஆட்சேபணைக்குரிய காட்சிகள் இருந்தால் உடனே அதை நீக்கி விட வேண்டும். இல்லையெனில் படத்தை வெளியீடு செய்ய விடமாட்டோம்; அப்படியே வெளியீடானாலும் திரையரங்குகளில் ஓடவிட மாட்டோம்," என்றார் லோகேந்திர சிங்.
கங்கனா: எதிர்ப்பவர்களை அழிப்பேன் கர்னி சேனா: திரைவாழ்வு நாசமாகும்
2 mins read
'மணிகர்னிகா' படத்தில் ஜான்சி ராணியாக கங்கனா ரணாவத். படம்: சதிஷ் -

