நடிகை சாய் பல்லவி தேர்வு செய்தே படங்களை ஒப்புக் கொள்கிறார். தமிழில் தியா படம் மூலம் அறிமுகமானவர் அடுத்து 'மாரி 2'ஆம் பாகத் தில் தனுஷ் ஜோடியாக ஆட்டோ ஓட்டுநராக நடித்திருந்தார். இப்படத்தில் தனுஷுடன் 'ரவுடி பேபி' பாடலுக்குச் சாய்பல்லவி குத்தாட்டம் போட்டிருந்தார். இப்பாடலை எழுதிப் பாடியிருந் தார் தனுஷ். நடிகர் பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். இப்பாடல் காட்சியில் சாய்பல்லவி போட் டிருந்த குத்தாட்டத்துக்குப் பலத்த வரவேற்பு கிடைத்தது. ரசிகர்கள் அவரைப் பாராட்டு மழையில் நனையவைத்தனர். பாடலை அனைவரும் ரசிப் பதை அறிந்து மகிழ்ச்சிக் கட லில் மூழ்கியுள்ளதாகத் தெரி வித்துள்ளார் சாய் பல்லவி. இந்நிலையில், 'ரவுடி பேபி' பாடல் 'யுடியூப்'பில் வெளியாகி 14 நாட்களில் 10 கோடி பேர் இப்பாடலைப் பார்த்திருக்கின் றனர். 10 லட்சம் பேர் 'லைக்' செய்துள்ளனர். இப்பாடலுக்கு இசை அமைத்திருந்த யுவன் சங்கர் ராஜா, "இப்படத்தில் பணி யாற்றியதில் மகிழ்ச்சி அடை கிறேன். உண்மையிலேயே இது மிகப்பெரிய விஷயம். எல்லாப் புகழும் இறைவ னுக்கே," என ஏ.ஆர்.ரஹ் மான் பாணியில் கூறியுள்ளார்.
மகிழ்ச்சிக் கடலில் சாய் பல்லவி
1 mins read
-

