நடிகர்கள் பலராலும் படப் பிடிப்புத் தளங்களில் பலமுறை தான் வித்தியாசமான துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார். இந்த துன்புறுத்தல் களை 'மீடூ' பாலியல் புகார்களோடு தொடர்பு படுத்தமுடியாது. இருப் பினும் நான் அனு பவித்த வேதனைகள் ஏராளம். அவற்றை எல்லாம் விரல்விட்டு எண்ணிவிட முடியாது என்றும் அவர் கூறி யுள்ளார். இ ந் நி லை யி ல் , தனக்கு நேர்ந்த பாலியல் சாராத துன் புறுத்தல்கள் பற்றி கூறியுள்ள கங்கனா, "துன்புறுத்தல்கள் பல மட்டங்களில் தொடர்கிறது. என்னுடைய பணியின் போது பல நடிகர்கள் மூலம் நான் பிரச்சினைகளைச் சந்தித்துள்ளேன். "சில நடிகர்கள் தலைக்கனத்துடன் செயல்பட்டனர்.
படப்பிடிப்புத் தளத்தில் 6 மணி நேரத்திற்கும் மேல் காத்திருக்க வைப்பது, தவறான நேரத்தில் படப் பிடிப்புக்கு அழைத்துவிட்டு நமது நேரத்தை வீணடித்து நிற்கவைப்பது, தேதிகளை எப்பொழுதும் தவறாகக் கூறி தனக்கு கிடைக்கவேண்டிய நல்ல சந்தர்ப்பங்களையும் தவறவிடச் செய் வது, நடிகர்கள் கடைசி நிமிடத்தில் படப்பிடிப்பினை ரத்து செய்துவிடுவது என பல இன்னல்களை அனுபவித்துள்ளேன்.

