ரஜினி, கமலுக்கு இருப்பதுபோலவே பெரும் ரசிகர் கூட்டம் 'தல' அஜித்குமாருக்கும் தள பதி விஜய்க்கும் உள்ளது. இதேபோல் சிம்பு, விக்ரம், தனுஷ், மாதவன், அர்ஜூன், விஜய் ஆண்டனி, விஜய் சேதுபதிக்கும் ரசிகர் பட் டாளங்கள் உள்ளன. நகைச்சுவை நடிகர் களுக்கும் சில ரசிகர் படையினர் உள்ளனர். இந்நிலையில் 'தல' என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அஜித், எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் துளி அளவும் ஆர்வம் இல்லை என்று தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அஜித் ரசிகர்கள் பாஜக கட்சியில் இணைந்திருப்பதாக செய்தி கள் வந்தன.
இதையடுத்து அஜித் அரசியலில் ஈடுபடப் போவதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பறந்தன. இதையறிந்த அஜித் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். "நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பதே இதற்கு காரணம். "சில ஆண்டுகளுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும் இந்தப் பின்னணியில்தான். "என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ, என் ரசிகர் இயக்கங்களின் மீதோ எவ்விதமான அரசியல் சாயமும் பூசப்படக் கூடாது என்று நான் சிந்தித்ததன் முக்கிய முடிவே அது. "என்னுடைய இந்த முடிவுக்குப் பிறகும்கூட சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெய ரையோ, என் ரசிகர்கள் பெயரையோ சம்பந் தப்படுத்தி ஒரு சில செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன.

