ரகுல்: பாதிக்கப்படும் பெண்கள் சுடச்சுட பதிலடி தரவேண்டும்

ரகுல்: பாதிக்கப்படும் பெண்கள் சுடச்சுட பதிலடி தரவேண்டும்

1 mins read
b24cfb42-cb67-4c97-bf5e-04d3be7029a2
-
Google News Preferred Icon

நடிகை ரகுல் ப்ரீத் சிங் அண்மையில் தனது காரிலிருந்து இறங்கிய போது சிலர் அதைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். கவர்ச்சியான தொடைப்பகுதி தெரியும்படி அவர் உடை அணிந்திருந்ததை பலரும் விமர்சித்திருந்தனர். வீட்டிலிருந்து புறப்படும்போது கால்சட்டை அணிய மறந்துவிட் டீர்களா என்றும் சிலர் நக்கலாக பதிவிட்டிருந்தனர். அதைக்கண்டு கோபம் அடைந்த ரகுல், "இந்தக் கேள்வியை உன் அம்மாவிடம் போய் கேள்," எனக் கடுமையாக ஏசி பதிலளித்திருந்தார். இந்நிலையில் 'தேவ்' பட நிகழ்ச்சிக்காக வந்திருந்த ரகு லிடம், ஏன் அப்படி கோபப்பட்டு பேசியிருந்தீர்கள் என்று செய்தி யாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ரகுல், "அந்தப் படத்தை எனது அனுமதி இல்லாமல் எடுத்ததுடன் அதை சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்து கொண்டார்கள். அதற்கு நான் எப்படி பொறுப்பாவேன்? அதன் தொடர்பில் என்னைத் தாக்கி எழுதப்பட்ட விமர்சனங்கள் என் மனதைக் காயப்படுத்தின. "அது எனக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. சிலரின் வாயை அடைக்க நான் கடும் சொற்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது. "விமர்சனம் செய்த நபருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது என் பதை உணர்த்தவே அப்படிச் செய் தேன். அந்த நபர் இனி அப்படி யாரையும் விமர்சிக்கமாட்டார் என நம்புகிறேன். பெண்கள் தங்க ளுக்கு ஏற்படும் இதுபோன்ற தொந்தரவுகளுக்கு அவ்வப்போது தகுந்த பதிலடி தரவேண்டும்," என்று கூறியுள்ளார் ரகுல்.